அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த சின்ன நடிகர்களுக்கு வந்த சிக்கல்..!


2010ல் தெலுங்கில் நடிகை அனுஷ்கா நடித்த பஞ்சாக்‌ஷரி படத்தில் அவருக்கு கணவராக நடித்தவர் நடிகர் சாம்ராட். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவி ஸ்வாதியிடம் அதிகமான வரதட்சணை கேட்டு துன்புறுத்தியாக வழக்கு பதிவு செய்து போலிஸ் அவரை கைது செய்துள்ளது.

இதேபோல சமீபத்தில் வெளியான பாகமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்தவர் வளர்ந்து வரும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மீது. இயக்குனராகும் ஆசையில் இருந்த ஒரு இளம்பெண் உன்னி முகுந்தனிடம் கதை சொல்ல அவரது வீட்டுக்கு சென்றபோது உன்னி முகுந்தன் அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக அவர் மீது அந்த புகார் அளித்தார்.

ஆக அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிக்க அதிர்ஷ்டம் கிடைக்கும் நடிகர்களை துரதிர்ஷ்டம் வழக்கு ரூபத்தில் வந்து சங்கடப்படுத்துவது ஆச்சர்யம் தான்.