“கட்ட பஞ்சாயத்து மட்டுமல்ல.. கெட்ட பஞ்சாயத்தும் நடக்குது” ; இயக்குனர் பாண்டிராஜ் பகீர் தகவல்..!


விரைவில் நடைபெற இருக்கின்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிட மனு தாக்கல் செய்துவிட்டார். ஆனால் தற்போதைய சங்கத்தினர் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் கொடுக்க போவதாக கூறியுள்ளதால் அவரது மனுவை நிறுத்தி வைத்திருக்கிறாராம் இந்த தேர்தலை நடத்தும் நீதியரசர்..

இது ஒருபக்கம் இருக்க விஷாலின் பக்கம் அணிவகுத்திருக்கும் தயாரிப்பாளர் கூட்டத்தை பார்த்தால் இயக்குனராக இருந்துகொண்டோ அல்லது நடிகராக இருந்துகொண்டோ தயாரிப்பாளர்கள் ஆனவர்கள் தான் அதில் நிறைய இருக்கிறார்கள்.. சமீபத்தில் இந்த குரூப்பில் உள்ளவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் பிரகாஷ்ராஜ், மிஷ்கின், பாண்டிறாஜ் உள்ளிட்டோரும் அடக்கம்..

இந்த நிகழ்வில் பாண்டிராஜ் பேசும்போது, “தயாரிப்பாளராக மாறியபின்னர் தான் ஒரு தயாரிப்பாளரின் முழுமையான போராட்டமும் வழியும் எனக்கு புரிய ஆரம்பித்தது.. குறிப்பாக ஒரு படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு நடக்கும் சிரமங்கள், அதற்கு எந்தவகையிலும் சரியாக ஒத்துழைக்காத தயாரிப்பாளர் சங்கம் என்பதெல்லாம் புரிய ஆரம்பித்தது.. நானே ஒரு ஐம்பது முறைக்கு மேல் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நியாயம் கேட்டு அலைந்திருப்பேன்.. ஆனால் அங்கே கட்ட பஞ்சாயத்து மட்டுமல்ல கெட்ட பஞ்சாயத்தும் நடக்குது” என பகீர் தகவலை கூறினார் பாண்டிராஜ்.