விசுவாசம் இல்லாத அனிருத்திற்கு ‘விசுவாசத்தில் இடமில்லையாம்..!


அஜித்-சிவா கொட்டனியில் நான்காவது படமாக விசுவாசம் என்கிற படம் உருவாக இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கிறார். இந்த தகவலை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

வேதாளம், விவேகம் படத்துக்கு இசையமைத்த அனிருத்துக்கு இப்படத்தில் வாய்ப்பு இல்லை என்பது அதிர்ச்சியான தகவல் தான். அனிருத்தை ஒதுக்க. என்ன காரணமாக இருக்கும் என விசாரித்தால் சில திர்ச்சியான விஷயங்கள் வ்வெளியே வந்துள்ளன.

விவேகம் படத்துக்கு இசையமைத்தபோது குறிப்பிட்ட காலத்தில் பாடலை கொடுக்காமல் அநியாயத்துக்கு அலையவிட்டாராம் அனிருத். அமெரிக்காவுக்கு இசைநிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வந்ததும் விவேகம் பாடல்களை ஏனோதானாவென கொடுத்தாராம்.

பின்னணி இசையமைக்கும்போதும் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் செய்தாராம். இந்த தகவல் அஜித் காதுக்குப் போனதால் விசுவாசம் படத்திற்கு கொஞ்சம் கூட விசுவாசமே இல்லாத அனிருத் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் அஜித்