திரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்


24 Hrs நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னணி நடிகையான திரிஷா நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு.

இந்த படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் திரிஷா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார்.

இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிடும் முனைப்பில் படக்குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் திரிஷா நடிப்பில் `சதுரங்கவேட்டை 2′, `கர்ஜனை’ ` ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.