அந்த அளவுக்கு முட்டாளா சிம்ஹா? குழந்தை கூட கேட்டால் சிரிக்குமே..!

சென்னைக்குள் நுழையுமுன் ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள்.. இப்போது அதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்து, பாபி சிம்ஹாவை ஹீரோவாக்கி படமாகவும் எடுத்து முடித்துவிட்டார்கள்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்குள் நுழைந்த பாபிசிம்ஹாவுக்கு, ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடிப்பதற்கு முன்னரே அவர் கதாநாயகனாக ஒப்பந்தமான படம் தான் இது. இப்படம் நாளை ரிலீசாக இருக்கிறது.

இப்போது சிம்ஹா லைம்லைட்டிற்கு வந்துவிட்டதால், இந்தப்படத்திற்கு டப்பிங் பேச தனியாக கூலி கொடுக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாராம்.

காரணம் இன்றைய நிலவரப்படி சிம்ஹாவின் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மதிப்புள்ளவை. அதை வெட்டியாக டப்பிங் பேசுகிறேன் என வீணாக்க அவர் விரும்புவாரா..? அதனால் கிட்டத்தட்ட 6௦ லட்சம் வரை கேட்டிருக்கிறார். இல்லையென்றால் படத்தின் லாபத்தில் பங்கு கொடுங்கள் என கூறினாராம்.

இது குறித்து, சமீபத்தில் நடைபெற்ற வேறு ஒரு படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில்அவரிடம் கேட்டால், ஷேர்னா என்ன சார்? அந்தப்படத்தை முதலில் குறும்படமாக எடுக்கிறேன் என்று சொல்லி என்னை ஏமாற்றினார்கள்.. அது உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி கேட்ட நிருபரிடமே எதிர் கேள்வி கேட்கிறார் பாபி சிம்ஹா.

இவ்வளவு பெரிய இடத்திலிருக்கும் ஒரு நடிகருக்கு ஷேர் என்றால் என்னவென்றே தெரியாதாம்..குறும்படம் என்று சொல்லி ஒரு நடிகரை முழு நீல படத்தில் நடிக்க வைக்க முடியுமா என்ன..? அந்த அளவுக்கு முட்டாளா சிம்ஹா..? சின்னக்குழந்தை கூட இதைக்கேட்டால் சிரிக்கும். இதனாலேயே படம் தயாராகியும் நீண்டநாட்களாக ரிலீஸ் ஆகாமால் இழுத்துக்கொண்டிருந்தது.

எப்பேர்ப்பட்ட வடிவேலுவையே ஆட்டம் காண வைத்த சினிமா இது.. வளரும் நேரத்தில் கவனமாக இல்லையென்றால் அப்புறம் வந்த வழியே டிக்கெட் எடுக்க வேண்டியதுதான்..