வனமகன் நாயகிக்கு வாய்ப்பு குவிவது இப்படித்தானாம்..!


ஒரு படம் நடித்து வெளியே வந்தபின் அந்த நடிகைக்கு வாய்ப்பு குவிவது என்பது வேறு விஷயம். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே ‘வனமகன்’ படத்தில் நடித்த வட இந்திய நடிகையான சாயிஷா சைகல் நடிகைக்கு இப்போதே இளம் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.

இத்தனைக்கும் நடிகை எந்த முயற்சியும் எடுக்கவில்லையாம். ஆனால் படத்தில் நடிகையின் ஜோடியாக நடித்த வனமகன்’ நாயகனுக்கு என ஒரு பெரிய நட்பு வட்டாரம் இருக்கிறதே.. அவர்களிடம் பேச்சுவாக்கில் நாயகியின் அருமை பெருமைகளை நாயகன் சொல்லிவைக்க, இப்போது ஆளாளுக்கு அவரை தங்களது படங்களில் ஜோடியாக்க துடிக்கிறார்களாம் இளம் நடிகர்கள்.