வேல்ராஜ் படத்தை தனுஷ் தான் இயக்குகிறாராமே..!

பொதுவாக தொலைதூரம் பஸ் ஓட்டும் ஆம்னி பஸ் ட்ரைவர்கள் இரண்டுவிதமாக தங்களது ஓட்டுனர் பணிகளை பார்ப்பார்கள். இரண்டு ட்ரைவர்கள் இருக்கும் பேருந்தில் ஒருவர் ஓட்டும்போது இன்னொருவர் தூங்குவார். அப்புறம் அவர் ரெஸ்ட் எடுக்க வந்ததும், இவர் போய் ஓட்டுவார். இது ஒரு வகை.. ஆனால் எதிர்பக்கத்தில் இருந்து வரும் அதே கம்பெனி பஸ்ஸில் ஒரு ட்ரைவர் மட்டுமே ஓட்டிவருகிறார் என்றால் அதற்கும் சூப்பரான ஐடியா வைத்திருக்கிறார்கள்.

இங்கிருந்து பஸ்ஸை ஒட்டிக்கொண்டு போகும் ட்ரைவர்களில் ஒருவர், பாதியிலே இறங்கி, அந்த பஸ்சிற்கு மாறி, அதில் வரும் ட்ரைவரை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தான் ஒட்டி வருவார். இது இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகை டூட்டி மாற்றும் வேலைகளைத்தான் இங்கே சினிமாவில் தற்போது இயக்குனர் வேல்ராஜும் தனுஷும் செய்து வருகிறார்களாம்..

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குனராக புரமோஷன் வாங்கிவிட்டாலும், ஒளிப்பதிவை கைவிடாமல் தன்னை விரும்பி அழைக்கும் இயக்குனர்களின் படங்களில் கேமராமேனாக பணியாற்றி வருகிறார். இன்னொரு பக்கம் ‘வேலையில்லா பட்டதாரி’ ஹிட்டை தொடர்ந்து, தனுஷ் உள்ளிட்ட அதே டீமை வைத்து இன்னொரு படத்தை இயக்கியும் வருகிறார்.

இந்த இடத்தில் தான் இந்த ட்ரைவர் மாற்றும் பணி நடக்கிறதாம். அதாவது வேல்ராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கும் காட்சிகளை படமாக்கும்போது மட்டும் வேல்ராஜ் இருப்பாராம்.. படத்தில் தனுஷ் இல்லாத காட்சிகளை படமாக்கும்போது தனுஷே டைரக்டராக மாறிவிடுவதாக சொல்லப்படுகிறது.. ஒளிப்பதிவு உதவிக்கு வேல்ராஜின் சீனியர் உதவியாளரை வைத்துகொள்கிறாராம் தனுஷ்.

அந்த நேரத்தில் வேல்ராஜ், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவந்த ‘வை ராஜா வை’ படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க போய்விடுவாராம். இதற்கு முன் வெளியான கொம்பன், தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் படம் இவற்றில் எல்லாம் இந்த சிஸ்டத்தை தான் பாலோ பண்ணினாராம் வேல்ராஜ். கிடைத்த இந்த கேப்பில் தனுஷ் வெகு வேகமாக டைரக்சனை கற்று வருகிறாராம். விரைவில் தனுஷ் தான் நடிக்கும் படத்தை தானே இயக்கப்போவதாக அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.