விஜய் ஆண்டனியின் நாயகிகளுக்கு இப்படி ஒரு ராசி இருக்கா..?


விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் ஹிட்டாகி விடுகின்றன. ஒரு நடிகராக அவரும் ஒரு தயாரிப்பாளராக அவரது மனைவியும் ஏன் இவரது படங்களை இயக்கும் இயக்குனர்களும் அடுத்த படங்களில் கமிட்டாகின்றனர்.. ஆனால் விஜய் ஆண்டனியின் படங்களில் கதாநாயகியாக நடித்தவர்களின் நிலையை யாராவது நினைத்து பார்த்தீர்களா..?

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் உதவியாளர் ஒருவர் அவருக்கு கதாநாயகி தேடும் கஷ்டத்தை புரடக்சன் மேனேஜர் ஒருவரிடம் புலம்பித்தள்ளினாராம். அதாவது விஜய் ஆண்டனியின் படங்களுக்கு பிரபல கதாநாயகிகள் கிடைப்பதில்லையாம்.. காரணம் அவரது படங்கள் ஆக்சன் என்பதால் மொத்த போகஸும் அவர்பக்கம் போய் விடுகிறதாம்.

அதனால் தான் படத்திற்கு ஒன்றாக புத்தும்புது கதாநாயகிகளாக தேடிப்பிடிக்கிறார்களாம். அப்போது பேச்சு வாக்கில் அந்த புரடக்சன் மேனேஜர் விஜய் ஆண்டனியின் உதவியாளரிடம் இதுக்கு முன்னாடி மூணு படங்கள்லயும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியா நடிச்ச ஹீரோயின்களை அதுக்கப்புறமா எந்த படத்துலயும் பார்க்க முடியலையேன்னு கேட்க, எனக்கு கொஞ்சம் வேலையிருக்குன்னு அவர் நழுவி எஸ்கேப் ஆகிட்டாராம்.

அட ஆமாம்ல.. விஜய் ஆண்டனி ஹீரோயின்ஸ் ரூபா மஞ்சரி, அக்சா பர்தசானி, சுஷ்மா ராஜ் எல்லோரும் எங்க இருக்கீங்க..?