விஜய் – விஜய் சேதுபதி இணையும் தளபதி 64 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தளபதி 64 படக்குழுவினர் தொடர்ந்து மூன்று நாட்கள் மூன்று அறிவிப்புகளை வெளியிடப்பபோவதாக அறிவித்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.

தற்போது முதல் அறிவிப்பாக தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படக்குழுவினரின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில ஆழ்த்தியுள்ளது.

பிகில் படப்பணிகளை முடித்து விட்ட விஜய், தளபதி 64 படத்திற்காக தயாராகி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் முதல் வாரம் துவங்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் நடிகர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றனர்.