விஜய், அஜித்தால் ஏற்பட்ட நட்டத்தை சரிக்கட்டும் விக்ரம்..!


எம்.ஜி.ஆர்.ரஜினி போன்ற ஜாம்பாவன்களை வைத்து படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனமான விஜயா புரடக்சன்ஸ் நிறுவனத்தின் 100வது படம்தான் அஜீத் நடித்த ‘வீரம்’. இந்தப்படம் தயாரிப்பு நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கொடுக்கவில்லையாம்.

அடுத்ததாக விஜய்யை வைத்து அவர்கள் தயாரித்த ‘பைரவா’ படத்தின் மூலம் வந்த வருமானமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லையாம். இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ஒரு படத்தை, விஜயா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்களுடைய 100வது படத்தில் அஜீத்தையும், 101வது படத்தில் விஜய்யை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்த விஜயா புரடக்சன்ஸ் இப்போது தனது 102வது தயாரிப்பாக விக்ரம் படத்தை உருவாக்கவிருப்பதாக உறுதியாக சொல்கின்றனர். இந்தப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.

இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டிருக்கிறாராம் கே.வி.ஆனந்த். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஆக அஜித், விஜய் படங்களில் விட்டதை, அல்லது சம்பாதிக்க தவறியதை விக்ரம் படத்தில் ஈட்டலாம் என கணக்கு போட்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.