அந்த நள்ளிரவில் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன..? பொன்னம்பலம் கொடுத்த ஷாக்


பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் களைகட்டி வருகிறது. குறிப்பாக பெண்கள் பின்னாடியே அலைந்து கடலை போடும் மஹத்தும், சாரிஹ் பின்னாடியே குட்டிபோட்ட பூனையாக சுற்றும் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் நிகழ்ச்சியை பார்க்கும் இளசுகளை சூடேற்றி வருகின்றனர்.

இந்த வார வெளியேற்றும் படலத்தில் பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன் இருவரில் யார் வெளியேற்றப்படுவார்கள் என மற்ற போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் பொன்னம்பலம் என்றே கூறினார்கள். அப்போது பேசிய பொன்னம்பலம் “எனக்கு வெற்றி, தோல்வி தனித்தனியாக தெரியாது. நான் வெளியேறினாலும் பிரச்சினையில்லை. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உண்மையாக இருங்கள். இந்த நிகழ்ச்சியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பார்க்கிறார்கள். வரம்பு மீறாதீர்கள். கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்” என்று மனதில் இருந்த அனைத்தையும் கொட்டினார்.

பொன்னம்பலம் சொன்ன சில விஷயங்கள் கண்டிப்பாக எடிட் செய்யப்பட்டே ஒளிபரப்பாகி இருக்கிறது என்பது போட்டியாளர்களின் உரையாடல்களிலேயே தெரிகிறது. அதை ஆமோதிக்கும் வகையில் பேசிய கமல், “நான் பேச நினைத்ததை பொன்னம்பலம் அப்படியே பேசிவிட்டார். அவர் பேசவில்லையென்றால் நானே பேசியிருப்பேன்” என்று கூறினார்

மேலும், “ஆணும் பெண்ணும் சமம் என்பதற்காக ஆண் செய்யும் தவறை எல்லாம் பெண்ணும் செய்ய வேண்டியதில்லை. அதே போல இந்த வீட்டிற்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதற்கு ஏற்றார்போல நடந்து கொள்ள வேண்டும். பொன்னம்பலம் இரவில் விழித்திருந்து பார்த்ததை அனந்த் பார்க்கவில்லை. நீங்கள் இந்த வீட்டிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க வந்துள்ளீர்கள். ஆனால் அதற்கான முயற்சியை இதுவரை யாருமே எடுக்கவில்லை. நீங்கள் நீங்களாக இருங்கள்” என்று பேசினார் கமல். அதை கேட்டதும் யாஷிகா, ஐஸ்வர்யா இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. நிச்சயம் ஏதோ பெரிதாக நடந்திருக்கும் என்றே தெரிகிறது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *