சுந்தர்.சிக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை..!


சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் நீண்ட நாட்கள் தாக்குப்பிடித்து நிற்பது போல, இயக்குனர்கள் பல வருடங்கள் தாக்குப்பிடித்து நிற்பது என்பது அரிது.. அப்படி நின்றாலும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு படங்களை தந்து வெற்றி பெரும் இயக்குனர்கள் வெகு சிலரே.. அப்படிப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் தான் நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி.

1995ல் அவர் முதன்முதலாக இயக்கிய ‘முறைமாமன்’ படத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட இந்த 22 வருடங்களில் ‘அரண்மனை-2’ வரை மொத்தம் 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது படங்கள் பெரும்பாலும் ஹிட் வகையை சேர்ந்தவைதான்.. தற்போது ‘சங்கமித்ரா’ என்ற பெரிய பட்ஜெட் படத்தை 3 மொழிகளில் இயக்கும் வேலைகளில் பிசியாக உள்ளார். இனி ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி..

ஆனால் இப்பொது சுந்தர்.சி பற்றி ஒரு ஷாகிங் நியூஸ் கிடைத்துள்ளது. ஆம். சின்னத்திரைக்காக ‘நந்தினி’ என்ற பெயரில் ஒரு சீரியல் இயக்கிவருகிறார் இது வருகிற 22ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.