வரிக்கு எதிரா எதுக்கு குரல் கொடுக்கணும்..? ; கொந்தளிக்கும் விஜய் தரப்பு..!


தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் தமிழக அரசு தனது கேளிக்கை வரியை தள்ளுபடி செய்யவேண்டும், தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கூறி கடந்த நான்கு நாட்களாக தியேட்டர்களை அடைத்து போராட்டம் நடத்தினார்கள். இதற்கு கமல் ரஜினி ஆகியோர் கூட குரல் கொடுத்தார்கள்..

ஆனால் அஜித், விஜய் இதுபற்றி வாய் திறக்கவேயில்லை.. அதுசரி.. அஜித் என்னைக்கு வாய் திறந்தார் இப்போது மட்டும் கருத்து சொல்வதற்கு..? ஆனால் அவ்வப்போது இதுபோன்ற பொது பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் விஜய்கூட வாய் திறக்கவில்லை என்றால் அதற்கு காரணம் இருக்கு என கொந்தளிக்கின்றனர் விஜய் தரப்பினர்.

“இந்த தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களே.. விஜய் படங்களை வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள்.. ஆனால் அந்த லாபத்தில் தயாரிப்பாளருக்கும் பங்கு தரவேண்டும் என்பதற்காகவே விஜய் படம் சரியா போகலைன்னு கண்ணை கசக்குவாங்க.. அதுமட்டுமா..? விஜய்யோட அடுத்த படம் ரிலீசாகிறப்போ, விஜய்யால எங்களுக்கு நஷ்டம்.. அதனால நஷ்ட ஈடு கொடுங்கன்னு வாசல்ல வந்து நின்னு போராட்டம் பண்ணுவாங்க.. இவங்களுக்காக, இவங்க கொள்ளையடிச்சு சம்பாதிக்க விஜய் எதுக்கு குரல் கொடுக்கணும்.. அதனால தான் அவர் சைலண்ட்டா இருந்தாரு” என்கிற விஜய் ஆதரவு தரப்பு..