சசிகுமாருக்கு வந்த சிக்கல் விஜய் ஆண்டனி படத்துக்கும் வருமா..?


தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் ரிலீஸ் நேரத்தில் அல்லது அதற்கு சற்று முன்பாக தலைதூக்கும் பிரச்சினைதான் டைட்டில் பிரச்சனை முக்கியமான முன்னணி நடிகர்கள் நடித்த, பிரபல இயக்குனர்கள் இயக்கிய, பிரபல நிறுவனம் தயாரித்த படங்கள் வெளியாகும் பொது, அந்தப்படத்தின் டைட்டிலை, இது என்னுடையது என சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒரு சிலர் கிளம்புவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். இது ஒரு பக்கமிருக்க ஏற்கனவே அப்படி பதிந்து வைக்கப்பட்ட, அதேசமயம் படமாக்கப்பட்ட டைட்டில்கள் இருப்பது தெரியாமல் அதனை முறைப்படி உரிமை வாங்காமல் சிலர் படமாக எடுத்து விடுவது வழக்கம் தான்.

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படம் வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு, நடிகர் கார்த்திக் பட தயாரிப்பாளர் ஒருவர் அந்த படத்தின் மீது வழக்கு தொடுத்தார். கார்த்திக் நடிப்பில் சுந்தரபாண்டியன் என்ற படத்தை அவர் தயாரித்து அது பாதியிலேயே நின்று இருந்தது. அதை எப்படியும் அவர்கள் திரும்ப படமாக எடுக்கப்போவதில்லை என்றாலும் சுந்தர பாண்டியன் என்கிற டைட்டிலை பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது வழக்கு தொடுத்து சுமார் 45 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக பெற்ற பின்னரே அந்த படம் வெளியாக முடிந்தது.

அதேபோல தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு காக்கி என டைட்டில் வைத்துள்ளார்கள். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் டா என்கிற ஒரு சிறிய எழுத்து டைட்டிலுடன் இணைந்திருக்கும். அதாவது காக்கி டா என யார் கேட்டாலும் டைட்டிலை சொல்லிக் கொள்ளலாம் என்பதுதான் இவர்கள் திட்டம்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் சரத்குமார் நடிக்க, காக்கி என்கிற பெயரில் ஒரு படம் தயாரானது. இதுவும் பாதி வளர்ந்து இருந்த நிலையில் சில பிரச்சினைகளால், அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் அப்படியே பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கும் காக்கி படத்திற்கு சசிகுமார் படத்திற்கு ஏற்பட்டது போல ரிலீஸ் நேரத்தில் பிரச்சனை வந்தாலும் வரலாம்.. அதனால் அதை சமாளிக்க தயாராகத்தான் காக்கிடா என்கிற டைட்டிலை வைத்துள்ளனராம்..

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *