இசை அமைப்பாளர்களை டேக் செய்த காமெடி நடிகர் சதீஷ்!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். முன்னணி ஹீரோக்கள் பலருடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார் சதீஷ். அவர்கள் மட்டுமல்லாது இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து காமெடியில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது.

காமெடி நடிகராக உள்ள சதீஷ் தற்போது ராஜவம்சம் திரைப்படத்திற்காக சாம் சி எஸ் இசையில் ஒரு பாடலை பாடுவது போலவும் இசையமைப்பாளர் தலையில் அடித்துக் கொள்வது போலவும் நகைச்சுவையான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

🎤 🎵 🎶 🎤 🤓🙈🤓
Thank u so much @SamCSmusic bro…. For ur information @gvprakash@anirudhofficial@MusicThaman@arrahman@ThisIsDSP@vijayantony@immancomposer@RSeanRoldan@hiphoptamizha#RajaVamsampic.twitter.com/s39fPvcxev

— Sathish (@actorsathish) February 4, 2020

அப்புகைப்படத்தை பதிவிட்டு, for your information என்று ஏ.ஆர்.ரகுமான், ஜிவிபிரகாஷ், அனிருத், தமன், இமான், விஜய் ஆண்டனி, தேவிஶ்ரீபிரசாத், சியான் ரோல்டன் என அனைத்து இசையமைப்பாளர்களையும் டேக் செய்துள்ளார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *