காஜல் அகர்வால் வில்லியாக நடிக்கிறாரா?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இயக்குனர் சங்கர்-கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி தொடங்கியது.

சில கட்ட படப்பிடிப்பு நடந்த பிறகு கமலுக்கு நடந்த ஆபரேஷன் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பில் தடை ஏற்பட்டது. தற்போது கமல் உடல்நலம் தேறி விட்டதால் வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அவர் வயதான வேடத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டாலும் அது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

காஜல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படத்தின் வேடம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,

‘இதுவரை நான் நடிக்காத கதபாத்திரம் இது. வழக்கமாக எல்லோரும் கூறுவது தானே என கேட்க வேண்டாம். இது உண்மையிலேயே வித்தியாசமானது. வேறு எதுவும் என்னால் கூற முடியாது’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு இப்படத்தில் வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.