‘மலைகிராமத்தில்’ பேருந்தில் பயணிக்கும் தலையில்லா முண்டம்…


எஸ். எஸ். ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவ்னம் சார்பாக ச. இராஜாராம் கதை, திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி இயக்கி தயாரிக்கும் முதல் படம் ‘மலை கிராமம்’. ஜவ்வாது மலை அருகில் இருப்பது மலை கிராமம். அங்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘மலை கிராமம்’.

காமெடி மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தில் தலை இல்லாத முண்டம் ஒன்று பஸ்ஸில் பயணம் செய்யும் காட்சி அனைவரையும் நிச்சயம் அதிர வைக்கும். இந்த படத்தில் அறிமுக கதாநாயகர்களாக சிவாஸ், நிதின் மற்றும் கதாநாயகிகளாக சுஷ்மா, காவேரி ஆகியோர் அறிமுகமாகின்றனர். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கோகுல் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

நகைச்சுவையில் நெல்லை சிவா கலக்குகிறார். வெண்ணிலா சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஜாய் மேக்ஸ்வெல் இசை அமைக்கிறார். இணை இயக்குனராக சண்முகம் பணியாற்றி இருக்கிறார். வசனம் உதவி மூசிவாக்கம் சங்கீதா மேற்கொண்டார்.

இந்த படத்தில் இடம் பெறும் நான்கு பாடல்களும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்று இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளரான ச. இராஜாராம் கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து post production பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.