புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ‘செயல்’!

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு – V.இளையராஜா / இசை – சித்தார்த்விபின்

எடிட்டிங் – R.நிர்மல் பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்

ஸ்டன்ட் – கன்னல் கண்ணன் / நடனம் – பாபா பாஸ்கர், ஜானி கலை – ஜான் பிரிட்டோ / தயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி

தயாரிப்பு – C.R.ராஜன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

இந்த படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் “ நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா “ என்ற பாடல் காட்சியில் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி இருவரும் பங்குபெற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சாலக்குடி, வாகமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம்.

சென்னையில் “ டே மாமா விட்டுத் தள்ளு இதுக்கேண்டா இவ்வளவு டல்லு “ என்ற பாடல் காட்சி முழுக்க முழுக்க சென்னையை பற்றிய பாடலான இதில் ராஜன்தேஜேஸ்வர் மற்றும் அவரது நண்பரான ஆத்தியா கோபி மற்றைய நண்பர்கள் பங்குபெற பாபாபாஸ்கர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் ரவி அப்புலு.