தளபதி 64 படத்தலைப்பு அறிவிப்பு! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்


பிகில் வெற்றிப் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் விஜய்க்கு 64வது படமாகும்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதோடு சேர்த்து படத்தலைப்பையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு அளித்துள்ளனர்.

இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய் இதில் கல்லூரி பேராசிரியராகவும், மாணவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.