5 மொழிகளில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம்


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்த கீர்த்தி சுரேஷ் “மைதான்” என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார்.

அமித் ஷர்மா இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்கிறார்.

அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை எடுத்த போனிகபூர் மைதான் படத்தை தயாரிக்கிறார். 1950-ல் இருந்து 62 வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற இந்திய அணியை வழி நடத்தி சென்றவரை பற்றி அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே 5 மொழிகளில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

மைதான் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கீர்த்தி சுரேஷ் கூறி உள்ளார்.