திரையுலகம் கோட்டையை நோக்கி பேரணி! – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பு!

எங்களுடைய கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாததால் புதிய திரைப்படங்களை வெளியிட போவதில்லை என்கிற நிலை தொடரும். இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் விஷால்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை ஜெமினி அருகே உள்ள பிலிம் சேம்பர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷால், பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி .சி. ஸ்ரீராம், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியதாவது ”பொதுமக்கள் திரை அரங்கிற்க்கு வந்து படம் பார்க்கும் போது எந்தவித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்த வரை புதுப்படங்கள் ரீலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம். எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அடுத்த வாரம் புதன் கிழமை பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும், ஆனால் அதற்கான தகுந்து தீர்வு விரைவில் கிடைக்கும் என்றார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்.

பெப்சி தலைவர் ஆர்,கே.செல்வமணி பேசிய போது ”திரை அரங்குகளில் கம்ப்யுட்டர் டிக்கெட்டுகளை கட்டாயம் வழங்க வேண்டும். குறைந்த அளவில் படம் பார்க்க வரும் மக்களிடம் அதிக அளவில் பனம் வாங்குவதால் தான் படம் பார்க்க திரை அரங்குகளை மக்கள் வருவதில்லை. அரசு இதை ஒரு வாரியமாக ஒழுங்கு செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவே வரும் புதன்கிழமை மனு கொடுக்க அனுமதி கேட்டுள்ளோம்.

கிடைத்தால் அனைவரும் ஒன்றாக பேரணியாக சென்று முதலவர் மற்றும் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுக்க உள்ளோம்” என்றார் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *