ஆக்‌ஷன் – விமர்சனம்


பழ.கருப்பயைா தமிழ்நாட்டின் முதலமைச்சர். இவருடைய இரண்டு மகன்கள் ராம்கி, விஷால். விஷால் இராணுவ அதிகாரியாக பணிபுரிகிறார். உடன் பணிபுரியும் தமன்னா விஷாலை ஒருதலைபட்சமாக காதலிக்கிறார். ஆனால் விஷாலோ ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார். இவர் ராம்கியின் மனைவியான சயாசிங்கின் தங்கை.

இது ஒருபுறமிருக்க, ராம்கியை தன்னுடைய அரசியல் வாரிசாக நிறுத்துகிறார் பழ.கருப்பையா. இந்நிலையில் தேர்தல் வருகிறது.

மத்தியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணிக்காக பழ.கருப்பையா கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்காக அந்த கட்சியின் தலைவர் சென்னைக்கு வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது அந்த கட்சி தலைவர் குண்டு வெடித்து இறந்து விடுகிறார். இந்த பழி பழ.கருப்பையாவின் அரசியல் வாரிசான ராம்கியின் மீது விழுகிறது.

இப்போது தங்களது குடும்பத்தின் மீது விழுந்த பழியைப் போக்குவதற்காக விஷால் களம் இறங்குகிறார். குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து தங்கள் குடும்பத்தின் மீது விழுந்த பழியை விஷால் போக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஷால் ஆக்‌ஷனில் கலக்கி இருக்கிறார். விஷாலுடன் படம் முழுவதும் பயணிக்கிறார் நாயகி தமன்னா. யோகி பாபுவின் காமெடி ரசிக்க வைக்கிறது.

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் அனைத்தும் காமெடிக்கு முக்கியத்துவம் அதிகமாக தரப்பட்டிருக்கும். அதிலிருந்து மாறுபட்டு முற்றிலும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இத்திரைப்படம் வெளிவந்துள்ளது.
படத்தின் இறுதியில் வரும் அரைமணி நேர கட்சிகள் ரசிகர்களைக் கவர்கிறது.

டுலேவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் நீளத்தில் கவனம் செலுத்தி ஆக்‌ஷனை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தியிருக்கலாம்.