சைக்கோ – விமர்சனம்


படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு கண் பார்வையற்றவர். கோவையில் வசித்து வரும் நாயகன் உதயநிதி நாயகி அதிதி ராவ் ஒருதலைபட்சமாக காதலித்து வருகிறார்.

அதே ஊரில் சில பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இது சைக்கோ கொலையாளியின் கை வரிசையாக இருக்கலாம் என தெரியவருகிறது.

இதேபோன்ற மர்மமான கொலைகளை செய்வது யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நாயகி அதிதி ராவும் அதே பாணியில் கடத்தப்படுகிறார்.

மற்ற பெண்களை கடத்தி கொலை செய்த அதே நபர்தான் நாயகியையும் கடத்தி இருக்கிறார் என்பது உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியவருகிறது.

இறுதியில் நாயகியை சைக்கோ கொலையாளி இடமிருந்து உதயநிதி காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கண் பார்வை அற்றவராக நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகி கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார். நித்யா மேனன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். தனது கனமான கதாபாத்திரத்தை உணர்ந்து துணிச்சலாக சக்கர நாற்காலியில் அமர்ந்து நடித்துள்ளார்.

நாயகன் கூடவே பயணிக்கும் சிங்கம்புலியின் நடிப்பு நம்மை கவனிக்க வைக்கிறது. நாயகனுக்கு கண்ணாக இருக்கிறார் சிங்கம் புலி.

இந்தப் படத்தையும் தனக்கே உரிய திரில்லிங் பழனியில் இயக்கியுள்ளார் இயக்குனர் மிஸ்கின். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் இசைஞானி இளையராஜாவின் இசைதான். பின்னணி இசை ரசிகர்களை மயக்குகிறது என்றால் அது மிகையல்ல.

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க விடாமல் திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம் இந்த சைக்கோவை.