ராஜாவுக்கு செக் – விமர்சனம்


படத்தின் நாயகன் சேரன் தனது மனைவி சரயுவை மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். சேரன் ஒரு போலீஸ் அதிகாரி. நாயகன் சேரனுக்கு தூங்கும் வியாதி இருக்கிறது.

சேரனின் மனைவி மகள் நந்தனா வெளிநாட்டுக்கு சென்று படிக்க வைக்க நினைக்கிறார். அதற்காக தனது கணவனிடம் ஒப்புதல் கேட்கிறார்.

ஆனால் சேரன், தனது மகள் 10 நாட்கள் தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்.

இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார் சேரனின் மனைவி. மகள் நந்தனாவை தந்தை சேரனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். சேரனின் வீட்டில் மகள் நந்தனா 10 நாட்களில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்.

ஆனால் கடைசி நாளில் சேரன் மீது இருக்கும் கோபத்தில் அவள் மகளை வில்லன் கடத்தி விடுகிறார். மகள் சீரழிக்கப்படுவதை வீடியோ லைவ்வில் பார்க்கவேண்டும் என்று சேரனை, வில்லன் டார்ச்சர் செய்கிறான்.

தூங்கும் வியாதியை மீறி வில்லனிடம் இருந்து மகளை சேரன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அன்பான மகளை காப்பாற்ற போராடும் பாசமிகு தந்தையும் கதாபாத்திரத்தில் சேரன் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் ரசிகர்கள் மனதை நெகிழ வைக்கிறார்.

நாயகி சரயு இயக்குனர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை சிருஷ்டி டாங்கே சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

சேரனின் மகளாக நடித்துள்ள நந்தனா தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.

இர்பான் வில்லத்தனத்தில் ரசிகர்களை மிரட்டி எடுத்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் திரைக்கதை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். இசையமைப்பாளர் வினோத் எஜமான்யா பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார்.

மொத்தத்தில் ஒரு பாசப் போராட்ட படமாக வெளிவந்துள்ளது இந்த ராஜாவுக்கு செக் திரைப்படம்.