விஜய் அஜித் போட்டியில்..! அறை வாங்கினாரா சாமி..!

விஜய்க்கு ஆதரவாக இயக்குனர் சாமியை அறைந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன்..!

நடக்குமா நடக்காதா என்றெல்லாம் அந்த இயக்குனர் யோசிக்கவில்லை.. கல்லெறிந்துதான் பார்ப்போமே என்கிற குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் விஜய்க்கு கதை சொல்ல முழு மூச்சாக களத்தில் இறங்கினார். பல வருடங்களாக முயன்றும் பலிக்கவில்லை.. சரி.. அஜித்தையாவது பிடிப்போம் என ஒரு வருடம் கொட்டிவாக்கத்தையே ரவுண்டுகட்டியதுதான் மிச்சம். அவரது பருப்பு இரண்டு பக்கமும் வேகவில்லை.

கொழுந்தனை கரெக்ட் பண்ணும் அண்ணி, மாமனாரின் இன்பவெறி ரேஞ்சுக்கு படம் எடுத்த அந்த இயக்குனரின் படத்தில் ஒரு அறிமுக ஹீரோவை நடிக்க அழைத்தாலே தலைதெரித்து ஓடுவார். அப்படிப்பட்டவரின் காத்து தல-தளபதி வீட்டுப்பக்கம் அடிக்க முடியுமா..?

இது ஒருபக்கம் இருக்க இப்போது ‘காங்காரு’ படத்தை எடுத்துள்ள அவருக்கு, படம் எடுக்கும்போது லைட்டாக மூளையில் பொறி தட்டியது. உடனே தனது படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவரை அஜித் ரசிகையாகவும், இன்னொருத்தரை விஜய் ரசிகையாகவும் உருமாற்றியவர், இரண்டு பெண்களும் தங்களது அபிமான நடிகர்களை புகழ்வதாகவும் எதிர் நடிகரை திட்டுவதாகவும் காட்சிகளை வைத்திருக்கிறாராம்.

புகழ்வது ஓகே பிரச்சனையில்லை. ஆனால் திட்டுவதுதான் இடிக்கிறது. இதில் கூட ஓரவஞ்சனை என்னவென்றால் நீண்ட காலம் விஜய்க்கு கதை சொல்ல அலைந்து ஏமாந்ததால், அவரை அதிகப்படியாக திட்டுவது போலவும், கொஞ்ச காலம் மட்டுமே அஜித்துக்கு கதை சொல்ல அலைந்ததால் அஜித்தை சும்மா லைட்டாக திட்டுவது போலவும் காட்சிகளை படமாக்கியிருக்கிறாராம்.

இந்த விஷயம் எப்படியோ கசிந்துவிட, இந்த தகவல் வினியோகஸ்தரான சிங்காரவேலன் காதுக்கும் போயிருக்கிறது. லிங்கா பிரச்சனையின் போது, ரஜினி பிறந்தநாள் என்ன அரசு விடுமுறை நாளா, இல்லை பண்டிகை நாளா கூட்டம் வருவதற்கு என ரஜினியையே மட்டம் தட்டுவது போல எகத்தாள அறிக்கை எல்லாம் கொடுத்தாரே அவரே தான் இவர். அப்படி கூறுவது எதனாலென்றால், ரஜினி எல்லாம் ஒன்றுமில்லை, அடுத்த சூப்பர்ஸ்டாராக விஜய் வந்துவிட்டார் என்பதை சொம்படிக்காத குறையாக சொல்வதற்காகத்தான்.

அப்படிப்பட்டவர் விஜய்யை தாக்கி, அஜித்தை அடுத்த சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு புகழ்ந்து இயக்குனர் சாமி காட்சிகளை அமைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டால் சும்மா இருப்பாரா..? இயக்குனர் சாமியிடம் ‘கங்காரு’ படத்தை போட்டுக்காட்ட சொல்லியிருக்கிறார். படமும் போட்டுக்காட்டப்பட்டது.

அந்த விஷயத்தில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி, இயக்குனர் சாமியை சிங்காரவேலன் அறிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படி ஒரு விநியோகஸ்தர் இயக்குனரை அடித்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.