சிவகார்த்திகேயன் மூலம் மீண்டும் பப்ளிசிட்டி தேடும் லட்சுமியம்மா..!


கொஞ்ச நாளாக இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.. காரணம் அம்மணி என்கிற ஒரு படத்தை டைரக்ட் செய்யும் வேளையில் இருந்தார்.. இப்போது அந்தப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டவர் படத்தின் வியாபாரத்திற்கு பப்ப்ளிசிட்டி வேண்டுமே என்ன செய்யலாம் என யோசித்து வந்தார்.

இந்த நிலையில் தான் சிவாகார்த்திகேயன் சில தினங்களுக்கு முன் ‘ரஜினி முருகன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா’ பாடல் பற்றி குறிப்பிடும்போது, அதை விஜய் டிவியின் நிகழ்ச்சியில் இருந்து எடுத்ததாக குறிப்பிட்டார்..

அவர் இந்தம்மாவை கிண்டல் பண்ண வேண்டாமே என்கிற நல்ல எண்ணத்தில் அப்படி சொல்லப்போக, இதை கேள்விப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இது தாண்டா சாக்கு என பிடித்துக்கொண்டு, சிவகார்த்திகேயனை பற்றி காட்டமாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னும் கொஞ்ச நாளைக்கு லட்சுமி பெயர் சோஷியல் மீடியாவில் ஓடும். அதற்குள் தனது பட பிசினஸை முடித்துவிட வேலைகளை முடுக்கி விட்டுள்ளாராம்.