“ஆமா… அந்தப்பாட்டு இல்லைன்னா படம் ஓடாது பாருங்க” ; நமுட்டு சிரிப்பில் கோலிவுட்..!


எப்படியோ சிம்பு’வின் இது நம்ம ஆளு ட்ரெய்லரை ரிலீஸ் பண்ணிட்டாங்க. அவரும் வெளிய வந்து பிறந்தநாள் கொண்டாடிட்டு மீண்டும் கூண்டுக்குள்ள போய் அடைந்ஜிக்கிட்டாறு.. இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தான் ரிலீஸ் பண்ணுதுன்னாலும் இன்னும் இரண்டு பாடல்கள் பாக்கி இருக்கிறதால அதையும் எடுத்து தரச்சொல்றாங்களாம்.

சிம்புவோட பிறந்தநாள் அன்றைக்கு பேசிய அவரது தந்தை டி.ராஜேந்தர், ஒரு பாடலை நயன்தாராவுக்கு பதிலாக ஆண்ட்ரியாவை வைத்தும் இன்னொரு பாடலை சிம்புவை வைத்தும் கமர்ஷியலாகவும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

நயன்தாரா நடிக்கவேண்டிய பாடலில் ஆண்ட்ரியா நடிப்பதை கேள்விப்பட்ட விநியோகஸ்தர்கள், ஆமா… அந்தப்பாட்டு இல்லைன்னா படம் ஓடாது பாருங்க… அட எடுத்தவரைக்கும் எடிட்டிங் பண்ணி படத்தை ரிலீஸ் பண்ணுவாங்களா.. அத விட்டுட்டு..” என நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்களாம்.