தமிழ் சினிமாவில் இதுவரை நடைபெற்ற சக்சஸ் மீட்டுகளிலேயே உலக பிரசித்தி வாய்ந்தது என்றால் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் ஹிடானதாக சொல்லி லிங்குசாமி நடத்திய சக்சஸ் மீட் தான். அது கொஞ்சம் ஓவராத்தான் போய்விட்டதோ எனும்படியாக அடுத்தடுத்து தொடர் தோல்விகள், அதனால் கடன் சுமை என நெருக்கடியில் சிக்கினார்.
இதனால் சிவாகார்த்திகேயன் நடிப்பில் தயாராக இருந்தும் ‘ரஜினி முருகன்’ படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கையை பிசைந்தார்.. தனது எதிர்காலமே ரஜினி முருகனில் தான் இருக்கிறது என நினைத்த சிவகார்த்திகேயன், படம் வெளியாவதற்கு நான் என்ன பண்ணட்டும் என ஒரு பேச்சுக்கு கேட்டார்.. உடனே ‘உன் சம்பளத்தை குறைச்சுக்கோ.. அப்படியே ரிலீஸ் பண்றதுக்கு கொஞ்சம் பணமும் கொடு” என கேட்டு வாங்கி அவரை நோகடித்தாராம் லிங்குசாமி. இதனால் சிவகார்த்திகேயனுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் வரை இழப்பு என்று சொல்லப்பட்டது..
ஒரு வழியாக படம் வெளியாகி, வெற்றிபெற்று, லிங்குசாமியின் கடன் பாக்கிகளையும் ஓரளவு செட்டில் செய்தது.. இதனால் கொஞ்சம் ரிலாக்ஸான லிங்குசாமி, இந்தப்படத்தின் சக்சஸ் மீட்டி நடத்த விரும்பியுள்ளார். இதற்காக சிவகார்த்திகேயனை அழைத்து பேசியபோது “ஸாரி.. என்னிடம் தேதிகள் இல்லை.. என்னால் வரமுடியாது.. நீங்கள் நடத்திக்கொள்ளுங்கள்” என சொல்லி தொடர்பை துண்டித்து விட்டாராம்.
இப்போது மீண்டும் டைட்டிலை ஒருமுறை படியுங்கள்..