அருள்நிதி பார்த்து பார்த்து தான் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.. சில படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தருகின்றன.. சில அவரை நம்பவைத்து கழுத்தறுத்து விடுகின்றன. அதனால் ஒரு சூப்பர் ஹிட்டுக்காக காத்திருந்த அருல்நிதி ஏதேச்சையாக மலையாளத்தில் வெளியான ‘மெமொரீஸ்’ படத்தை பார்க்க, அதை உடனே இங்கே தமிழில் ரீமேக் செய்து நடித்தும் விட்டார்.
அதுதான் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் ‘ஆறாவது சினம்’ படமாக உருவாகி இருக்கிறது. தமிழில் இந்தப்படத்தின் இயக்குனர் ‘ஈரம்’ அறிவழகன் தானே என நீங்கள் கேட்கலாம். உண்மைதான்.. ஆனால் இதன் மலையாள ஒரிஜினலான ‘மெமொரீஸ்’ படத்தின் இயக்குனர் சாட்சாத் நம்ம ஊர் ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான். அங்கே வெற்றிகரமாக 100நாள் ஓடிய படம் இது.
ஜீத்துவின் ‘த்ரிஷ்யம்’ (பாபநாசம்) போலீஸுக்கே தண்ணிகாட்டும் ஒரு சாமான்யனின் புத்திசாலித்தனத்தை படம்பிடித்து காட்டியது. என்றால், ‘மெமொரீஸ்’ படம் சீரியல் கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் புத்திசாலித்தனத்தை காட்டியது.. அதை தமிழிலும் காட்டப்போகிறது..
ஆக, ஜீத்து ஜோசப்பின் ‘த்ரிஷ்யம்’ கமலுக்கு ஒர்க் அவுட் ஆனது போல ‘மெமொரீஸ்’ படம் அருள்நிதிக்கு நிச்சயமாக ஒர்க் அவுட் ஆகும் என நம்பலாம்…