ஹன்ஷிகாவின் மீது பொறாமைப்பட்ட சீனியர் நடிகை..!


இன்றைய இளம் நடிகைகளை பார்த்து சக இளம் நடிகைகள் தான் பொறாமைப்பட வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை.. வயதான அம்மா நடிகைகள் கூட பொறாமைப்படுகிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. இதை சமீபத்தில் தனது பேச்சின் மூலம் உண்மை என நிரூபித்திருக்கிறார் சீனியர் நடிகை ஜெயப்ரதா.

முன்னாள் நடிகை ஜெயப்ரதா தனது மகன் சித்துவை தமிழில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த, தானே தயாரித்துள்ள படம் தான் ‘உயிரே உயிரே’.. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜெயப்ரதா, “நடிகைகளிலேயே நான் மிக அழகான பெண் என்று ‘லெஜண்ட்ரி இயக்குநர் சத்யஜித்ரே’ என்னிடம் கூறுவார்.. ஆனால் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை ‘அழகே அழகே’என வர்ணித்தது எனக்கு சற்று பொறாமையாகத்தான் இருந்தது” என கூறி அருகில் அமர்ந்திருந்த ஹன்ஷிகாவையே வெட்கப்படவைத்துவிட்டார்.