வரலட்சுமியின் நிலைமை இப்படியா ஆகவேண்டும்..!


‘தாரை தப்பட்டை’ படம் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் வரலட்சுமி. அட இந்த பொண்ணுகிட்டேயும் இவ்வளவு நடிப்பு திறமை இருக்கா என பலரையும் ஆச்சர்யப்பட வைத்தார். இந்தப்படத்தை பார்த்துத்தான் மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘கசபா’ என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.. சில தினங்களுக்கு முன் அந்தப்படம் ரிலீஸும் ஆனது.. படம் வெளியாவதற்கு முன் அந்தப்படத்தில் அவர் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றே சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் அய்யோ பாவம்.. படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் வில்லன் நடிகர் சம்பத்… இதில் இருவருக்கும் ரொமான்ஸ் வேறு.. அதுமட்டுமல்ல, விபச்சார விடுதி நடத்தும் ஈவு இரக்கமற்ற பெண்ணாகவும் இந்தப்படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி.. தமிழில் கதாநாயகியாக கோலோச்சுவார் என பார்த்தல் மலையாளத்தில் இப்படி நடிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டாரே என னியாநிகும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.