கண்பட்டு விடுமோ..? ; கலக்கத்தில் ரஞ்சித்..!


ரஜினி படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு இருக்கும் படபடப்பு இயற்கையாகவே பா.ரஞ்சித்திற்கும் இருக்கத்தான் செய்கிறதாம். கதை, காட்சியமைப்பு என எந்தவிதத்திலும் ரஜினிக்காக தன்னை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் தான் நினைத்ததை எடுத்து முடித்துவிட்டார் ரஞ்சித்.. ரஜினியும் படம் நன்றாக வந்திருப்பதில் மிகுந்த சந்தோஷத்தில் தான் இருக்கிறார். ‘நெருப்புடா’ என தொடங்கும் டீசரே படம் ஹிட்டாகும் என சொல்லாமல் சொல்கிறது..

அதற்கேற்றமாதிரி இதுவரை தமிழ்சினிமா போகாத நாடுகளில் எல்லாம் கபாலியை ரிலீஸ் செய்கிறார்கள். 50 மொழிகளில் ரிலீஸ் ஆகிறதாம். பிரமாண்ட ஹாலிவுட் தியேட்டர்கள் ‘கபாலி’க்கு சிகப்பு கம்பளம் விரித்திருக்கின்றன.. இந்தியாவில் மற்ற நான்கு சினிமா கேந்திரங்களும் தங்களது மொழிப்படங்கள் ஜூலை-22ல் ரிலீசாவதை நிறுத்தி வைத்திருக்கின்றனவாம். இவ்வளவு பிரமாண்டமாக கிளம்பும் எதிர்பார்ப்பை தயாரிப்பாளர் தாணு எதிர்பார்த்தாலும் இயக்குனர் ரஞ்சித் திகைத்துத்தான் போயுள்ளாராம். எங்கே கண்பட்டு விடுமோ என்றும் கூட சஞ்சலப்படுகிறாராம் ரஞ்சித்.