சந்தானமும் மம்முட்டியும் ஒரே நேரத்தில் டென்சனாக காரணம் என்ன..?


கடந்த ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக, அதாவது ஜூலை-7ஆம் தேதி தமிழில் சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியானது.. இதனுடன் இன்னும் சில படங்கள் வெளியானாலும் கூட இந்தப்படம் மட்டுமே நன்றாக இருந்ததால் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடித்து ஓடியதுடன் ஓரளவு வசூலையும் தந்தது.

இப்போதும் கூட சில தியேட்டர்களில் ஓடுகிறதுதான்.. ஆனாலும் ‘கபாலி’ ரிலீசால் சந்தானம் படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் பல தியேட்டர்களில் இருந்து படத்தை தூக்கி விட்டார்களாம். இன்னும் சில தியேட்டர்களில் காட்சிகளை வெகுவாக குறைத்து விட்டார்களாம்.

ரஜினி படம் ரிலீஸ் என்பது சந்தோசம் தான் என்றாலும் நன்றாக ஓடும் தனது படத்தை தூக்கிவிட்டதால் சந்தானம் மூடு அவுட் ஆகிவிட்டாராம். இதேபோலத்தான் கேரளாவில் அதே ரம்ஜான் பண்டிகை தினத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’ என்கிற படம் வெளியானது. ஆனால் அங்கேயும் கபாலி தனது கைவரிசையை காட்ட, மம்முட்டிக்கும் அதே நிலைமைதானாம்.

இதில் மம்முட்டிக்கு ஒருபக்கம் ரஜினி மீதும் இன்னொரு பக்கம் மோகன்லால் மீதும் வருத்தம் என்கிறார்கள் கேரளா விநியோகஸ்தர்கள்.. ரஜினி மீது வருத்தம் இருப்பது சரி.. அது என்ன மோகன்லால் மீது கோபம்..? பின்னே ‘கபாலி’ படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்தது மோகன்லால் தானே..!