“அது வேற வாய்’ ; கபாலி’ விஷயத்தில் பல்டி அடித்த வைரமுத்து..!


சமீபத்தில் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படம் பற்றி பலரும் பலவிதமாக விமர்சித்துக்கொண்டிருக்க, எதிர்பாராதவிதமாக திரையுலகில் இருந்தே ஒருவர் ‘கபாலி’ படம் தோல்வி என அமில வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்.. அதுவும் அவர் ரஜினிக்கு மிக நெருங்கிய நண்பரான வைரமுத்து என்பதுதான் ஷாக்கிங்காக இருக்கிறது.

நேற்று முன்தினம் தனது நண்பர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ‘கபாலி’ படம் குறித்து விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.. வைரமுத்து பேசிய அந்த வீடியோவை பார்க்கும்போது, அதில் கபாலி படம் தோல்வி என்றும், படத்தில் கபாலி கோட் அணிவது பற்றி பேசிய வசனத்தை கிண்டலடிப்பது போலவும் பேசியிருந்தார் வைரமுத்து.. இதை அறிந்த ரஜினி ரசிகர்களிடம் இருந்து வைரமுத்துவை நோக்கி கண்டன கணைகள் பாய ஆரம்பித்தன.

கபாலி’ படம் தோல்வி என இவர் பகிரங்கமாக பேசவேண்டும் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்தப்படத்தில் பாடல் எழுத அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததுதான்.. அதிலும் ரஜினி இந்த விஷயத்தில் எதுவும் தலையிட்டுக்கொள்ளாததும் தான் என்பது நன்றாகவே தெரிகிறது..

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடலாசிரியர் கபிலனுடன் ரஜினி உணவு அருந்தியபடியே பேசி மகிழும் புகைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது எல்லாம் வைரமுத்துவின் மனதை தாக்கியிருக்கலாம். இது எல்லாம் சேர்ந்து அவரது கௌரவ பிரச்சனையாகவே மாறிவிட்டது போலும். அதனால் தான் இப்படி பேசியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுநாள் வரை வைரமுத்து பாடல்கள் இல்லாமல் ரஜினி படம் வெளியானது இல்லை.. ரசிகர்களின் மத்தியில் தனது வரிகளால் ரஜினியின் பிம்பத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தி பிடித்ததில் வைரமுத்துவின் பங்கு அதிகம் என்பதை மறுக்க முடியாது.. ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா’, “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மாறாக மாட்டேன்” என ரஜினிக்கு ஆதரவாகவே ஒலித்துவந்த வைரமுத்துவின் நாக்கு இப்போது தடம் புரண்டு இருப்பதுதான் அதிர்ச்சி தருகிறது..

ஆனால், அப்பாடி தடம் புரண்டு இருப்பதையும் அவரே ஒப்புக்கொண்டு, ரசிகர்களிடமும் ரஜினியிடமும் மன்னிப்பு கோரும் விதமாக விளக்க கடிதம் ஒன்றை எழுதி நிலைமையை சமாளித்துள்ளார்.. அந்த கடிதத்தில், ““தான் விழாவில் பேசும்போது கபாலி வெற்றி-தோல்வி பற்றி பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ளவேண்டும் என கூறினேன்.. அப்படி பேசும்போது வெற்றி என்ற வார்த்தை தவறிப்போய் விட்டது.

இதை உணர்ந்து நேற்று சென்னை வந்த ரஜினியிடம் நானே இதுபோன்று நடந்துவிட்டதாக கூறினேன்.. அவரும் பெருந்தன்மையுடன் அதை ஏறுக்கொண்டார். நான் மிகவும் நேசிக்கும் ரஜினியை பற்றி அப்படி சொல்வேனா..? எங்கள் நட்பு பெரியது. தயவுசெய்து யாரும் இதை சர்ச்சையாக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.