தற்போது சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள ‘கிடாரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.. இந்தப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்துள்ளார் நிகிலா விமல். இதற்கு முன் வெளியான ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமாருடன் ஜோடியாக நடித்தவர், இதில் மீண்டும் இணைந்திருக்கிறார்.
சசிகுமார் நடிக்கும் படங்களில் பெரும்பாலான ஹீரோயின்கள் இரண்டுமுறையாவது நடித்து விடுகிறார்கள். அனன்யா, ஸ்வாதி, அபிநயா, லட்சுமி மேனன் ஆகியோரை தொடர்ந்து அந்த பட்டியலில் நிகிலா விமலும் இணைந்துள்ளார். வரலட்சுமி போன்று ஒரு படத்தில் இணைந்து நடித்தவர்கள் கூட, தன்னுடன் மீண்டும் அடுத்தடுத்த படங்களில் சேர்ந்து நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார் சசிகுமார்.