சசிகுமார் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் படம் தான் கிடாரி.. மண்மணம் மாறாத தெற்கத்தி கதைக்களம்.. அதே முரட்டு சசிகுமார் என சசிகுமார் படங்களில் இடம்பெறும் ரெகுலர் அம்சங்களுடன் இந்தப்படம் வெளியாகிறது. ‘பிரம்மன்’ என்கிற படம் மட்டும் அதுவும் கோவை மாநகரை மையமாக கொண்டு உருவான படம் மட்டும் தான் இதுவரை அவர் நடித்த சிட்டி சப்ஜெக்ட்.. மற்றவை எல்லாம் கிராமத்து படங்கள் தான்.
அவர் நகரத்து படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாரோ இல்லையோ தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் அவர் தான் நடிக்கும் படங்களில் கிராமத்தை விட்டு தாண்டவேண்டாம், முக்கியமாக சென்னைக்குள் நுழையவேண்டாம் என அன்பான தடை உத்தரவே போட்டுவிட்டார்களாம்.
காரணம் சசிகுமாரின் கிராமத்து படங்கள் தான் பி மற்றும் சி சென்டர்களில் நன்றாக கல்லா கட்டுகின்றனவாம். சசிகுமாரும் தனக்கு கிராமத்து ஆடியன்ஸ் தான் அதிகம் என்பதால் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக கிராமத்து கதைகளிலேயே தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளாராம்.