ராதிகா மகள் திருமணத்தில் ஒதுங்கி நின்ற வரலட்சுமி..!


தனது தந்தை சரத்குமார், தனது தாய் சாயாவை விவாகரத்து செய்ததையோ, அல்லது அதன்பின் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்திருந்த ராதிகாவை மறுமணம் செய்ததையோ அவரது மகள் வரலட்சுமி எந்தவிதத்திலும் எதிர்க்கவில்லை… அது தந்தையின் சுதந்திரம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்..

ஆனால் அதற்காக அவரால் ராதிகா குடும்பத்துடனும் உரிமையோடு ஒட்டி பழகவும் முடியவில்லை. ராதிகாவின் மகள் ரேயானுக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் தரப்பட்டதால், பெயரளவுக்கே அவர்களுடன் இணைந்திருந்தார். அதனாலேயே தனது தந்தையின் மற்றும் ராதிகாவின் எதிரியாக கருதப்படும் விஷாலுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார்.

நேற்று ராதிகாவின் மகள் ரேயானின் திருமணம் நடைபெற்றதல்லவா..? இதில் வரலட்சுமி கலந்துகொண்டார் என்பது தெரியும்.. ஆனால் தனது வீட்டு திருமணம் போல மனம் ஒன்றி கலகலப்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் வரலட்சுமி தலைகாட்டவில்லை என்றே தெரிகிறது. நேற்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களில் மணமக்களுடன் வரலட்சுமி இருக்கும் போட்டோ ஒன்றுகூட இல்லை என்பது இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.