கதை திரைக்கதை வசனம் இயக்கம் ‘படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை பார்த்திபன் தயாரித்து இயக்கியுள்ளார்.கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதே விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜின் குருவணக்க நாள் நிகழ்வும் நடைபெற்றது. சொல்லப்போனால் பாக்யராஜை கௌரவப்படுத்தும் விழாவாகவே இதை நடத்தினார் பார்த்திபன்.
இந்த விழாவில் பாக்யராஜ் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், அவரிடம் உதவியாளராக பணியாற்றி இயக்குனராக உயர்வடைந்தவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் பார்த்திபன்.. அந்தவகையில் பாக்யராஜின் டைரக்சனில் சொக்கத்தங்கம் படத்தில் நடித்த கேப்டன் விஜயகாந்திற்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது..
ஆனால் சில காரணங்களால் அதில் விஜயகாந்த் கலந்துகொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது.. இந்நிலையில் பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.