நிக்கி கல்ராணியின் வாய்ப்பு சிருஷ்டிக்கு கைமாறியது இப்படித்தான்.!


தமிழில் தற்போதைக்கு பிசியான நடிகை யார் என்றால் முதல் ஆளாக நிக்கி கல்றாணியை நோக்கி கைகாட்டலாம். காரணம் `மொட்ட சிவா கெட்ட சிவா’, `மரகத நாணம்’, `கி’, `ஹரஹர மகாதேவகி’ உள்ளிட்ட பல படங்கள் நிக்கியின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மலையாள படத்திலும் நிக்கி நடித்து வருகிறார்.

இந்தநிலையில் பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவி இயக்கிவரும் ‘1971-பியாண்ட் தி பார்டர்ஸ்’ என்கிற படத்தில் நடிக நிக்கிக்கு லக் அடித்தது.. ஆனால் அந்தோ பாவம்.. பல படங்களில் பிசியாக இருப்பதால், கால்ஷீட் பிரச்சனையால் அந்தப்படத்தில் நடிக்கமுடியாமல் விலகிவிட்டார் நிக்கி. இப்போது அவருக்கு பதிலாக சிருஷ்டி டாங்கே அந்தப்படத்தில் நடித்து வருகிறார்.

இது அவருக்கு முதல் மலையாள என்ட்ரி ஆகும். ஆனாலும் இவர் கதாநாயகியாக நடிப்பது மோகன்லாலுக்கு அல்ல. ‘கெளரவம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தாரே அல்லு சிரிஷ், அவருக்குத்தான் ஜோடியாக நடிக்கிறாராம். அல்லு சிரிஷ் ராணுவ கமாண்டோவாக நடிக்க, சிருஷ்டி டாங்கே கிராமத்து பெண்ணாக நடிக்கிறாராம்.