கமல், வைரமுத்துவை டபுள் டூட்டி பார்க்கவைத்த சோஷியல் மீடியா விஷமிகள்..!


ஜல்லிக்கட்டு விவகாரம், அதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற நிகழ்வுகள் என அனைத்திலும் கமல் தனது ஆரோக்கியமான விமர்சனத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார்.. கவிஞர் வைரமுத்துவும் இதேபோன்று சில கருத்துக்களை கூறிவந்தார்..

இப்போது ஹைட்ரோ கார்பன் விஷயத்திலும் மக்கள் சார்பாக கமல் கருத்து கூறிவருகிறார்.. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அரசாங்கத்தை விமர்சித்து வைரமுத்து எழுதியாக ஒரு கவிதையும் நெடுவாசல் மற்றும் போலீஸாரின் அடக்குமுறையை எதிர்த்து கமல் எழுதியதாக ஒரு ஒரு கவிதையும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது..

இவர்கள் இருவருமே இவற்றை தாங்கள் எழுதவில்லை என மறுத்துள்ளனர். சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்கு இதுபோன்று குரல் கொடுப்பதே பெரிய விஷயம்.. அப்படிப்பட்டவர்களின் பெயர்களில் சில விஷமிகள் உள்நுழைந்து இப்டி கெட்ட பெயரை உருவாக்குவதால், இனி எதை சொன்னாலும் எழுதினாலும் இவர்கள் இருவரும் இதை நாங்கள் தான் எழுதினோம், இதையெல்லாம் நாங்கள் எழுதவில்லை என சொல்லும்படியாக டபுள் டூட்டி பார்க்கவைத்து விட்டார்களே..