கெட்டவார்த்தை பேசிய கௌதம் மேனன்..!


ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தற்போது ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் இருக்காது. ஆனால், இந்தப் படத்திலும் சின்ன வயது பசங்க தங்களது அடையாளத்தை தேடுவார்கள் என்று சொல்லியிருந்தார் விஜய் மில்டன்.

இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனியை நடிக்க வைத்திருக்கிறார். தற்போது படத்தின் டீசரில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனை பின்னணி குரல் கொடுக்க வைத்திருக்கிறார். இந்த டீசருக்கு வைரமுத்து, அடுத்து கெளதம் மேனன் இருவரில் யாராவது ஒருவர் வாய்ஸ் கொடுத்தால் நன்றாகயிருக்கும் என்று நினைத்தாராம் விஜய் மில்டன்.

தற்போது கெளதம் மேனனைத்தான் பேசவைத்துள்ளாராம். இந்த டீசரை பார்த்துவிட்டு பலர் திட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் சில இடங்களில் கெட்ட வார்த்தைகள்கூட வரும் என்கிறார் விஜய் மில்டன்.. ஓஹோ.. அதனால் தான் வைரமுத்து இந்த டீசருக்காக குரல் கொடுக்கவிலையோ என்னவோ..?