நயன்தாராவுடன் வெளிநாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்..!


நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக இருக்கலாம். அவரது காதலர் விக்னேஷ் சிவன் இப்போதுதான் வளர்ந்து வரும் இயக்குனர். ஆனால் என்னதான் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும் காதல் வயப்பட்டு விட்டால் நயன்தாராவின் மனதிலும் சாதாரண பெண்ணைப்போல சின்னச்சின்ன ஆசைகள் இருக்கத்தானே செய்யும்…

அதை நிரூபிக்கும் வகையிலேயே இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

கூடவே தனது காதலி நயன்தாராவையும் அழைத்து சென்றுள்ளார். நியூயார்க்கில் இருவரும் பிறந்தநாளை கொண்டியுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது..