மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் படம் ‘மாஸ்டர் பீஸ்’.. இந்தப்படத்தில் மம்முட்டி காலேஜ் புரபெசராக நடித்துள்ளார். வரும் கிறிஸ்துமஸ் ரிலீஸாக, டிச-21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்திற்கு, கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரி ‘ஜெய் பாரத் தியேட்டரின் முதல் நாள் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டை வெளியிட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.
மம்முட்டியுடனான நட்பின் அடிப்படையில் மட்டும் ‘மாஸ்டர் பீஸ்’ படத்திற்கு சரத்குமார் இப்படி பப்ளிசிட்டி கொடுத்துள்ளதாக நினைத்துவிட வேண்டாம். இந்தப்படத்தில் அவரது மகள் வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக, கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் முக்கிய காரணம். இது மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலட்சுமி நடிக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது..