நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வு எழுதுவதற்காக, வெளி மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு ரயில் இலவச டிக்கெட் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், பிரசன்னா, காயத்ரி ரகுராம், அருள்நிதி போன்ற நடிகர்கள் சிலரும் மாணவர்களின் பயணச்செலவை ஏற்று உதவுவதாக சோஷியல் மீடியாவில் உதவிகரம் நீட்ட ஆரம்பித்தனர்..
குறிப்பாக அரசுப்பள்ளியில் படித்த 2௦ மாணவர்களின் நீட்’ பயணச்செலவை அருள்நிதி ஏற்றுக்கொள்வதாக சொன்னவுடன், இது திமுகவுக்கு சாதகமாக பேச்சை உருவாக்கி விடும் என்பதை உணர்ந்து தான் ஆளும் அரசு, மாணவர்களின் பயணச்செலவை ஏற்றுக்கொண்டு விட்டதாக, திமுக வட்டாரத்தில் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு பேசி வருகிறார்களாம்.