சில நாட்களுக்கு முன் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை மிகவும் கேவலமான படம் என பலரும் விமர்சித்தனர்.. அந்தப்படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தான் ஏற்கனவே ஹரஹர மஹாதேவகி என்கிற அடல்ட் காமெடி படத்தையும் எடுத்தவர்.. அதனால் இவர் இப்படித்தான் படம் எடுப்பார் என ஒரு முத்திரை இவர்மீது படிந்தது..
பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இவர் இயக்கும் படங்களுக்கு போகமுடியாது என விமர்சனம் பலமாக வீசப்பட்டது. ஆனால் ஆச்சர்யமாக ஆர்யாவை வைத்து இவர் இயக்கியுள்ள கஜினிகாந்த் படத்திற்கு எல்லோரும் பார்க்கும் விதமாக ‘யு ‘ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு..