ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் யுவன்-வெங்கட்பிரபுவின் உறவினரான ஹரி பாஸ்கர் என்பவர் கதாநாயகனாக அறிமுக ஆகியுள்ளார். இன்று நடைபெற்ற பேய்பசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவரை பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் வெங்கட்பிரபு.
இயக்குனர் வெங்கட் பிரபு. பேசும்போது, “ஹரி என்னுடைய சகோதரன் தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். நான் ஏற்கனவே பிரேம்ஜியை அறிமுகப்படுத்தியதில் ரசிகர்கள் என்மேல் செம கோபத்தில் இருப்பதால், அடுத்ததாக இன்னொரு நபரை அறிமுகப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்..
அதனால் என் படத்தில் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்று ஹரி பாஸ்கருக்கு என் மேல் கோபம். எப்படியாவது ஒரு டைரக்டர் புடிச்சு ஒரு படம் நடிச்சுட்டு வந்துடு.. அதுக்கப்புறம் உன்னை என் படத்திலே நடிக்க வைக்கிறேன் என சொல்லியிருந்தேன்.. இதோ ஒருவழியாக பேய்ப்பசி மூலம் ஹீரோவாகி விட்டார்” என கூறினார் வெங்கட் பிரபு