பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கதிர் பெருமிதம்


வெற்றிப்பட கூட்டணியான விஜய்-அட்லி மறுபடியும் இணைந்துள்ள படம் பிகில். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் மெகா வெற்றி பெற்ற நிலையில் பிகில் படம் குறித்து ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கதிர் கூறியதாவது,

“தளபதி நெஞ்சில் குடியிருக்கும் நண்பர்களுக்கு வணக்கம். முதல் முறை இவ்ளோ கூட்டத்தை பார்க்கிறேன். பிகில் எனக்கு பம்பர் பரிசு. வெறித்தனமான பாசிட்டிவிட்டி விஜய் அண்ணாவிடம். அவரின் வெறித்தனமான ரசிகன் நான். பிகில் ஒரு உலக தர விளையாட்டு படமாக இருக்கும். விஜய் இந்த படத்தில் வெறித்தனமாக விளையாடியிருக்கார். 100 நாட்கள் படப்பிடிப்பில் 200% உழைப்பை தந்திருக்கிறார் அட்லி”

என்று பெருமிதம் கொண்டார்.

இப்படத்தில் நயன்தாரா, விவேக், இந்துஜா, ஆனந்த்ராஜ் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.