சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 168 படத்தைப் பற்றி தினமும் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
டி.இமான் இசையமைக்கிறார். சூரி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளார். கீர்த்திசுரேஷ் படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்த நிலையில் ரஜினியுடன் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை படத்தில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சூப்பர்ஸ்டாருடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மீனா. இவர் 24 வருடங்களுக்குப் பிறகு தலைவர் 168 படத்தின் மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைய உள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.