இடி மின்னல் காதல் ; விமர்சனம்


அமெரிக்காவுக்கு செல்ல இருக்கும் நாயகன் சிபி, அதற்கு முன்பாக தனது காதலி பவ்யா ட்ரிகாவுடன் காரில் ஜாலியாக வலம் வர, திடீரென்று குறுக்கே வருபவர் மீது மோதி விடுகிறார். இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்துவிடுகிறார். தெரியாமல் நடந்த விபத்து என்றாலும், தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து சிபி வருத்தப்பட்டாலும், அவர் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து உதவிகளையும் காதலி பவ்யா ட்ரிகா செய்து வருகிறார் நாயகன் அமெரிக்க சென்றாரா ? ஆதித்யா தனது அப்பாவை கொன்றவரை கண்டுபிடித்தாரா ? போன்ற கேள்விக்கு பதில் சொல்லும் படம் இடி மின்னல் காதல்

நாயகனாக நடித்திருக்கும் சிபி காதல் காட்சியிலும், ஆக்சன் காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னால் ஒரு உயிர் பலியானதை நினைத்து வேதனைப்படும் காட்சியிலும், ஆதித்யாவின் சூழ்நிலையை அறிந்து கவலைப்படும் காட்சியிலும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் பவ்யா ட்ரிகா, அளவான நடிப்பு மற்றும் அழகோடு ரசிகர்களை கவர்கிறார். வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வின்செண்ட் நகுல், சிறப்பான வில்லன் நடிகராக மிரட்டுகிறார் ,பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஷ்மின் பொன்னப்பா திரையில் ரசிக்கும் படியாகவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் .

சிறுவன் ஆதித்யா அப்பா இறந்த துக்கத்தை தாங்காமல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தடுமாறும் காட்சிகள் அனைத்தும் தரம் மிக்கவையாக உள்ளது. அதிலும், தனது அப்பாவின் மரணத்திற்கு சிபி தான் காரணம் என்றதுமே அவர் மீது கொலை வெறிக்கொண்டு அவர் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரசன்கள் அனைத்தும் எக்சலண்ட்.

ஜெயசந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை வழக்கத்தை விட குறைவான சத்தத்தில் அளவாக பயணித்திருக்கிறது

ஒரு விபத்து மூன்று கதைகளை இணைத்து ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல திரைக்கதை அமைத்து படமாக்கி உள்ளனர். எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தை வைத்துக்கொண்டு, பலவிதமான கதாபாத்திரங்களின் வடிவமைப்போடு இயக்குநர் பாலாஜி மாதவன் அமைத்திருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், சில இடங்களில் சற்று குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிற கதையை யோசித்த இயக்குநர், திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டியிருந்தால் இடி மின்னல் காதலை ரசிகர்கள் அதிகளவில் காதலித்திருப்பார்கள்.