ல் த க சை ஆ ; விமர்சனம்


கணவன் மனைவி இருவருக்குமே சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தால்..? அவர்களிடம் வசதி இருந்தால்..? அப்படி உருவானது தான் இந்த படம். நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு பிரண்ட்ஸ் படத்தில் பேசி நடித்து பிரபலமான வசனத்தையே இந்த படத்திற்கு டைட்டிலாக வைத்து விட்டனர். நிஜ தம்பதிகளான சதா நாடார் மற்றும் அவரது மனைவி மோனிகா செலேனா இருவருமே தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் இது.

கதை என்னவென்றால் சதா நாடாருக்கு அவ்வப்போது வரும் கனவில் நடக்கும் விஷயங்களை மறுநாள் அவர் நிஜத்தில் நடந்தது போலவே உணர்ந்து மற்றவர்களிடம் பேச ஆரம்பிக்கிறார். இதனால் அவர் மனைவி உட்பட பலரும் அவரிடம் பயப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் அவரே பயங்கரமான குழப்பத்திற்கு ஆளாகி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கிறார். சில நேரங்களில் கனவில் வந்த சம்பவங்கள் உண்மையிலேயே நடப்பதையும் பார்க்கிறார். இந்த நிலையில் அவர் கண்ட கனவு நிஜமா, உண்மையில் அப்படி நடப்பது என்ன, இதன் பின்னணியில் வேறு ஏதேனும் நபர்களின் செயல்பாடு இருக்கிறதா என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.

சதா நாடார், மோனிகா இருவருமே நிஜத்திலும் கணவன் மனைவி என்பதால் ரொமான்டிக் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் மிக நெருக்கம் காட்டி நடித்து இருக்கின்றனர். ஆனால் நடிப்பு என்று பார்த்தால் சதா நாடாருக்கு அவ்வளவாக நடிப்பு வரவில்லை. அதே சமயம் மோனிகாவிற்கு ஓரளவு நடிப்பும் நல்ல கவர்ச்சியான முகமும் கை கொடுக்கின்றன.

படத்தில் இவர்களை தவிர சொல்லிக் கொள்ளும்படியான கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரங்கள் என எதுவும் இல்லை. ஒரு விறுவிறுப்பான திரில்லரை கொஞ்சம் கவர்ச்சிகரமாக எடுக்க வேண்டும் என நினைத்த இந்த இயக்குனர் தம்பதிக்கு எம் எஸ் மனோகுமார் ஒளிப்பதிவியிலும் பிஜே ஜான்சன் இசையிலும் சுரேஷ் சர்மா பின்னணி இசையிலும் ஓரளவு துணை நிற்க முயற்சித்திருக்கிறார்கள்.

கனவில் வரும் பிரச்சனையை நிஜத்தில் சரி செய்ய போராடும் கதை என்பது புதிதாக இருந்தாலும் இன்னும் அதை கொஞ்சம் லாஜிக்காக உயிரோட்டத்துடன் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்